Monday, September 21, 2009

தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பது தான்


நிர்ணித்ர தேஜோவிஜித த்ராத்யாதயநமோ நம: ஓம்

குறைகள் உள்ளவரிடம் அதை எடுத்துக் காட்ட வேண்டுமானால், நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும். தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக் கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது.

காமமும் ஒரு நெருப்புத் தான். அது தீயாக எரிகிறது. அதற்குப் பிரியமான பொருளைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகமாகிக் கொண்டே போகிறது. அது நம் மனதையே கறுப்பாகிவிடுகிறது.

குற்றம் இழைத்தபின் ஒருவரைத் தண்டிப்பதும், ஒருவர் சுபாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்டனைக்கு பயந்தே குற்றம் செய்யாமல் இருக்கச் செய்வதும், இரண்டாம் பட்சம்தான். குற்றம் செய்கிற எணணமே தோன்றாமல் செய்வதுதான் உயர்ந்தது.

Tuesday, September 8, 2009

இடையறாத இறை சிந்தனைக்குத்தான் பக்தி என்று பெயர். இதில் அன்பு மிகவும் முக்கியம். அன்போடு அவனை நினைப்பதே பக்தி


ஓம்மூகிபூத அனேகலோக வாக்ப்ரதாய நமோ நம:

காரியம் செய்து விட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில்லாமல், உலக நலனுக்காக காரியங்களைப் பண்ண ஆரம்பியுங்கள் என்று சாத்திரங்கள்
கூறுகின்றன.

வேதம் வேண்டாம், கோயில் வேண்டாம் என்பது தான் மிகவும் உச்ச நிலையில் வேதமே சொல்வது. ஞானம் வந்த நிலையில் பேதம் ஏதும் இலலை; பிராம்மணன் இல்லை; தீண்டாதான் இல்லை, என்று வேதமே சொல்கிறது.

Saturday, September 5, 2009

சொந்த ஆசை, நுவேஷம் இல்லாதபோது, எந்த காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது.

                     ஓம் ஆசார்யபாத அதிஷ்டான அபிஷிக்தாய நமோ நம:

வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூகசீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது. எல்லோரும் ஈசனின் குழந்தைகள் என்ற பக்தியினால்தான் மக்களை ஒன்று சேர்க்க முடியும்.


நாம் செய்யும் பாபத்திற்கு உடம்பு தண்டனை; பாபத்திற்கு மூலம் கெட்டகாரியம்; கெட்டகாரியத்திற்கு மூலம் ஆசை; ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூல காரணமாகிய ஆசையைப் போக்கினால் தான் நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.


ஜாதியில் உயர்வு, தாழ்வு நிச்சியமாக இல்லை. மகான்கள் அப்பர், நம்மாழ்வார், சேக்கிழார், நந்தனார், கண்ணப்பர் மாதிரியானவர்கள் எந்த ஜாதியிலும் தான் தோன்றியிருக்கிறார்கள்.

Friday, September 4, 2009

"மனநிறைவினால் ஏற்படும் நிம்மதி இல்லாமல் உண்மையான நலன் என்பது இல்லவே இல்லை"


                                ஓம் சந்த்ரசேகரேந்த்ரதஸ்மதாசார்யாய நமோ நம:


" கர்மா" என்கிற கயிறு. "பசு" என்னும் மனிதனை பிறவி என்று மூளையோடு கட்டிப்போட்டிருக்கின்றது. அந்தக் கயிறு தான் பாசம். இவனுடைய ஆசை என்பதே தான் இப்படி பாசமாக அவனை சம்சார சக்கரத்திலேயே சுற்றிச் சுற்றி வரும்படி செய்கிறது. மனம் என்கிற கத்தி அந்தக் கயிறைத் துண்டித்து ஜீவாத்மப் பசுவை பிறவிச் சுழலிலிருந்து விட்டு அருளுகிறது. அப்போது அவன் பசுவே இல்லை. பசுபதியான சிவமே ஆகிறான்.


நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும்.

"தூராத் தூரே அந்திகே".தூரத்திற்கெல்லாம் சமீபம்"


"எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி" என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே, தெரியாதவரை அவன் தூரத்தில் இருப்பவன் தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனை பார்க்க முடியாது. அவன் உங்கிட்டேயே இருப்பவன் தான். "தூராத் தூரே அந்திகே".தூரத்திற்கெல்லாம் சமீபம்" என்று கருதி செய்கிறது.

அன்னதானத்திற்கு என்ன விசெஷம் என்றால், இதுலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திபடுத்த முடியும். ப்ணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு, இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும்
வாங்கிக்கொள்கிறவன் அதற்கு மேல் தந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிற போது ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும் ஒர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது.

காஞ்சி காமகோடி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் அறிவுரை

                                                                    ஜகத் குரு

அனுக்ரஹம் நூறு - An Introduction

I am indeed delighted in bringing you a Website on Shri Kanchi Kamakoti Maha Swamigal’s Teachings/Anugrahams. I offer here on this site “ ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபெரியவாளின் 101 திவ்ய தர்சன்ங்கள்” [அனுக்ரஹ உரைகளுடன்] - Courtesy – Shri Vishwanatha Sharma, which I am sure will be of great interest to one and all. This Encylopedia is a rare collection of Maha Periyavaa’s “உபதேசங்கள்”.



I sincerely hope that my pages on the Great Sage of Kanchi will lighten the readers and serve as a guiding force in making our lives more meaningful and worth living.


Let us spread the Teachings of Maha Periyavaa.


May the Paramachariar’s Blessings Grace all of us.

ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்-அருளாட்சி 1907-1994)


ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்



(அருளாட்சி 1907-1994)






1894 மே மாதம் 20-ம் தேதி, ஜய வருடம் வைகாசி மாதம் எட்டாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, அனுஷ நட்சத்திரம் கூடிய புண்ணிய தினத்தில் தென்னார்க்காடு மாவட்டம், விழுப்புரம் நகரத்தில், நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் அவதரித்தார்.






தந்தை சுப்ரமணிய சாஸ்திரிகள், விழுப்புரம் கல்விச்சாலைகளில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். தாய் மகாலக்ஷ்மி, கர்நாடக ஸ்மார்த்த பிராமண வகுப்பினர். தஞ்சையை ஆண்டு வந்த மகாராஷ்டிர மன்னனான அமரசிம்மனின் அரசவையில் கௌரவமான பதவிகளை, சுவாமிகளின் தந்தைவழி முன்னோர் வகித்து வந்தனர்.
Related Posts with Thumbnails