Saturday, November 28, 2009

தன் பெண்டாட்டியை தன் சம்பாத்தியத்திற்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவது தான் புருஷனுக்கு கெளரவம்



" நிர்மாண சாந்தி மஹித நிச்சலாய நமோ நம : ஓம் "

ஆசைக்கும் வெறுப்பிற்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்த காரியங்களிடையிலும் உயர்வு, தாழ்வு தெரியாது.  நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம்.

பணக்காரன் பணம் தருவதும் ஏழை உழைப்பு தருவதும் பெரிய தியாகமில்லை. பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்று கொண்டு மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும். ஏழை தன் ஊழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக காலணா நன்கொடை கொடுக்க வேண்டும்.  அதுதான் பெரிது.

மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தை விட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது



  " ஓம் அமந்தானந்த் க்ருத மந்தகமனாய நமோ நம: "


இந்த நாளில் [excite ] கிளர்ச்சியூட்டிவது பண்ணுவதுதான் [entertainment ] [ களியாட்டம்] என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளிலோ [elevate] உன்னதமாக்குவது பண்ணுவதுதான் [entertainment] என்று தெரிந்து கொண்டு விட்டாலும் முடியாத ஆத்மார்த்த மனதாக்கி சாதகத்தில் அடங்கச் செய்தார்கள்.


"எண் சாண் உடப்பிற்கு சிரசே [தலை] பிரதானம்" என்கிறொம். அப்படி வேததிற்கும் ஒரு சிரசு [தலை] இருக்கிறது. உபநிடதங்கள் தான் அப்படிப்பட்ட தலை.

மூன்று இலக்கணங்கள் உள்ளவன் தான் "ஆசாரியன்"



                              "நிர்ணித்ர தேஜோவிஜித த்ராத்யாதய நமோ நம: ஓம்"


மூன்று இலக்கணங்கள் உள்ளவன் தான் "ஆசாரியன்" என்று வைத்தார்கள்.

ஒன்று, சாத்திய சித்தாந்தத்தை நன்றாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இரண்டு, தெரிந்த்தை வாழ்கையில் நடத்திக் காட்டும் ஆசார சீலராக இருக்க வேண்டும்.


மூன்று, இப்படி தனக்குத் தெரிந்த கடைப்பிடிக்கும் சாத்திரத்தைப் பிறருக்கு கற்றுக் கொடுத்து அவர்களையும் நெறியாக வாழ்க்கையில் நிலை நாட்ட வேண்டும்.  மாணாக்கன் சுத்தனாகவும் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சொல்லிக் கொடுப்பதை நன்றாக
புரிந்து ஏற்றுக் கொள்வதே க்ரஹண சக்தி. அப்புறம் அதை மறக்காமல் புத்தியில் இருத்திக் கொள்வதே தாரண சக்தி.
Related Posts with Thumbnails