Wednesday, December 23, 2009

கட்டுப்பாடு பண்ணுவதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். எதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். ரொம்பவும் கட்டுப்



                 
                   "ஓம்சாக்ஷாத்க்ருட ஜகன்மாத்ரு ஸ்வரூபாய நமோ நம: "

பணம் கொழித்தவர்களும் கூட தடபுடல் பண்ணாமல் சிக்கனமாகவே திருமணம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் பண்ணுகிற டாம்பீகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரி ஆகி விடுகிறது. ஆகயால் கச்சேரி, விருந்து என்று தாங்கள் செலவிடக்கூடிய இந்த பணத்தைக் கொண்டு வசதியில்லாத ஏழைப் பெண்களுக்குக் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும்.

நல்லது, நல்லது என்றால் எது நல்லது? அன்பு தான் மிகவும் நல்லது. "அன்பே சிவம்" என்கிறோம். சிவம் என்றாலும் ஒன்றுதான் "சுபம்" என்றால் நன்மை, நல்லவைகளில் உயர்ந்த நன்மை எது? அன்புதானே?

அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிகளுக்கும் ஆனந்தம். உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே





          
                      "வாதபேத விஹீனாத்ம போததாய நமோ நம: ஓம்"


பெண்கள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவர்கள். அவர்களில் பண்பு கெடுவதற்கு இடமே தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. குலப்பெண்களின் சித்தம் கெட்டுப் போய்விட்டதானால், அப்புறம் தர்மமே போய்விடும்.

நாம் "தானம் கொடிக்கிரோம்" என்ற வார்த்தையைச் சொல்வது கூடத் தப்புதான். "பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான் - கொடித்தோம்" என்று அடங்கி அடக்கமாக கொடுக்க வேண்டும். எங்கே இதிலும் ஒரு அகங்காரம் வந்து விடுமோ என்று பயந்துகொண்டு கொடுக்க வேண்டும்.

Monday, December 21, 2009

குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட, பெரிய ஆபத்து எதுவுமில்லை


                        ஓம் அகிலாண்டேஸ்வரி கர்ண பூஷகாய நமோ நம:



மாணவர்களுக்கு புத்தி மட்டும் வளர வேண்டுமென்றில்லாமல் குணநலனும் வளர வேண்டும் என்றால் அது சுத்தமான தனிப்பட்ட குருமார்காளால் நடக்கிற அளவுக்கு, கல்வி நிறுவனத்தால் ஒரு நாளும் முடியாது.

நிறுவனத்தில் அறிவினைத் தான் பரீட்சித்து வளர்க்க முடியும். குணத்தை முடியாது. வித்யையை வித்யை [அறிவு] என்று குருமார்கள் கற்றுக் கொடிப்பது சீடர்கள் கற்றுக் கொள்வதும் தான் உயர்ந்தது. "பணத்துக்காகவும் வித்யை" என்பது இடைப்பட்டது. "பணத்திற்காகவே வித்யை" என்றால் அது தாழ்ந்தது.

நமக்கு நிஜமாக சிரத்தையும், தைரியமும் இருந்தால் எதையும் நடற்றிக் கொண்டு விடலாம். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும்


                         வேதவேதாங்க தத்வ ப்ரபோதகாய நமோ நம: ஓம்

"புராணங்கள் புளுகு மூட்டைகள்" சாத்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்பவை என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் குழந்தைகள் கேட்டு வருகிறார்கள். இவர்களுக்கு எப்படி நம்மத வழி முறைகளிலும் நெறிமுறைகளிலும் பிடிப்பு ஏற்பட முடியும்?

அவனவனுக்கும் அதது கடமை என்கிறபோது, அதில் உயர்வு, தாழ்வு இல்லவே இல்லை. ஆனால்,
பணம் தான் குறிக்கோள், பதவிதான் குறிக்கோள் என்றால், அதிகப் பணம் சேர்க்கிறவன் உயர்த்தி, மற்றவன் தழ்த்தி, பெரிய பதவியில் வ்ருகிறவன் உயர்த்தி, மற்றவன் தாழ்த்தி என்ற பேத எண்ணங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

Monday, December 14, 2009

ஆலயத்திற்கு சுத்தமில்லாமல் போகக் கூடாது. அங்கு அசுத்தமான பொருட்களைச் சேர்க்கக் கூடாது







                         " நிரந்தர மஹானந்த ஸம்பூர்ணாய நமோ நம: ஓம் "

பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ணிக் கொண்டிருந்தாலே போதும்,  தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும்.

கிருஷ்ணன் பண்ணிய திருட்டுக்களை நினைத்தால் நமக்கு திருட்டு புத்தி போகும்.  அவன் ராச லீலை பண்ணியதை நினைத்தால் நமக்கு காமம் போகும்.  அப்படி விக்நேசுவரருடைய வக்ரதுண்டத்தை நினைத்தால், நமது வக்ரகுணங்களும் போகும்.

Wednesday, December 2, 2009

அன்பு தான் நல்லதைச் செய்வது. ஆன்பு தான் புனிதம்


                       

                         ஓம் காந்தி நிர்ஜித ஸுர்யேந்து கம்ராபாய நமோ நம:





அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தருவது லக்ஷ்மிகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது. புனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு. ஆசையும், காமமும் புனிதம் புனிதமில்லை. அன்புதான் புனிதம். அதனால்தான் "அன்பேசிவம்" என்று சோல்வது.


இப்போது கை நாமாகத் தோன்றுகிறது. குரல் நாமாகத் தோன்றுகிறது. உடம்பு நாமாகத் தோன்றுகிறது. இதுபோல் உலகனைத்தும் நாமாகி விட வேண்டும். அப்படிப்பட்ட குணம் ஒருவனுக்கு அனுபவத்தில் வந்தால் அவன் சண்டாளனாக இருந்தாலும் அவந்தான் பண்டிதன். இந்த ஞானம் தான் மாறாக ஆனந்தமாக மோட்சம். இந்த சரீரத்தில் இருக்கும் போதே அனுபவிக்கக்கூடிய மோட்சம்.

போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து அதை கவனத்துடன் செலவழிக்க வேண்டும்



                           
                            ஓம் சசிஷ்ய கண யாத்ரா விதாயகாய நமோ நம:



பெரிதாக வாய்ப்பந்தல் போட்டு விட்டு வாழ்க்கையில் வேறு விதமாக இருந்தானானால், அவன் எத்த்னை அழகாக சத்தியத்தை எடுத்துச் சொன்னாலும் அதற்கு மற்றவர்களை தூண்டி விடும் சக்தி இருக்காததால், அது சத்தியத்தோடு சேரவே சேராது.  உயிரில்லாத வெற்றுப் பேச்சு சத்தியம் சத்தியமேயில்லை.


தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக் கொள்வது பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக் கட்டிக் கொள்கிறோம் என்பது உண்மை.


கட்டுப்பாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.
Related Posts with Thumbnails