Friday, January 29, 2010

வெளிப் பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது


                 
                               ஓம் சங்கரபதாம்போஜ சிந்தனாய நமோ நம:


வெளிப்பொருள் ஏதோ கிடைக்காததால் நமக்கு குறை வந்து விட்டதாக துக்கப்படுவது சுத்த தப்பு.  நமக்கு குறையே இல்லை.  நமக்குள் நாமே பூரண பொருள்.  நமக்கு அந்நியமாக வெளி என்றே ஒன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமகுள்ளேயே அடக்கம்.

கோபத்திலே பல பாபங்களைச் செய்கிறோம்.  கோபத்திற்கு காரணம் ஆசை, காமம்.  காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும்.  பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்பது முடியாது. பற்றை ஒழித்துவிட்டால், பாபம் செய்யாமல் இருக்கலாம்.

Tuesday, January 5, 2010

பெரியவர்கள், மற்றவர்கள் செய்த பெரிய தவறுகளையும் மறந்து விட்டு. தாங்கள் செய்த சிறு தவறுகளைத் தான் பெரிதாக நினைப்பார்கள். ஜாதியில் உயர்வு தாழ்வு நிச்சயமாக இல்லை



                          " பாதமூல நதானேக பண்டிதாய நமோ நம: ஓம்"

மௌனத்தைக் கடைபிடித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இருக்காது. இக்கெடுதலைத் தவிர்பது மட்டுமல்ல, நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மௌனத்திற்கு உண்டு. "மௌனம் கலக நாஸ்தி; மௌனம் சர்வார்த்த சாதகம்".



"ரொம்பவும் அழகாக இருக்கிரோம்; பிரமாதமாக அலங்காரம் பண்ணிக்கொண்டிருக்கிறோம்" என்று அலங்காரப்படுகிறவர்களுக்கு பெரிய தண்டனை அவர்களை யாரும் ஏரெடித்துப் பார்க்காமல் அலட்சியப் படுத்தும்படி செய்வதுதான்.
Related Posts with Thumbnails