Sunday, February 14, 2010

ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்து கொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்



"சாஸ்த்ரா புராணாதி விசாராய நமோ நம: ஓம்

தற்போது பொருளாதாரத் தேவைகளை அதிகமாகிக் கொண்டே போவதைத் தான் "வாழ்க்கைத் தரம்" என்கிறார்கள். இதைவிட்டு மனதினால் உயர்ந்து உண்மையாகவே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதைத்தான் பெரிதாக எண்ண வேண்டும்.


மனநிறைவு வெளிப்பொருட்களால் ஒரு நாளும் கிடைக்காது. இவைகளைச் சேர்க்க மேலும் மேலும் சௌகரியத்திற்கு ஆசைப்பட்டுக்கொண்டு புதுப்புதுப் பொருட்களைக் கண்டு பிடித்து வாங்கிக் கொண்டே தான் இருப்போம். நாம் இருப்பதைப் பார்த்து வசதியில்லாதவர்களூக்கும் இதே ஆசை வெறியை உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, சண்டை எல்லாம் உண்டாகின்றன.

இறைவனும் குருவும் வேறில்லை


"ஸ்ரீசோட சாந்த கமல ஸ்வஸ்திதாய நமோ நம: "

இறைவனும் குருவும் வேறில்லை.  இறைவனே தன்னைக் காட்டிக் கொடுக்கிற ரூபத்தில் இருக்கிறான். இப்படி நம்பி ஒருவரை குருவாக வரித்துவிட்டால், பலன் நிச்சயம்.


எழுத்து, அதைப்படித்து மூளைக்குப் புரிகிற அர்த்தம் -- இவைகளோடு வேதம் முடிந்துபோய் விடுவதில்லை. பெரிய அனுபவங்களைத் தரும் சக்தி அதனுடைய எழுத்து வடிவதற்குள்ளேயே இருக்கிறது. அதை உள்ளே வத்துக் கொண்டிருக்கும் "மறை" யாக அது இருக்கிறது.


எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்கின்றன; ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வர்.  எனவே எவருமே தங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தை தழுவ வேண்டியதில்லை.

Thursday, February 4, 2010

படிப்பு, பணம், பதவி, புகழ் இவற்றை நாம் தேடிப் போவது "அலங்காரம்" தான்



" சுபாவ மதுரோதார காம்பீர்யாய நமோ நம : ஓம்

வெளி அலங்காரம் மட்டுமில்லை - படிப்பு, பணம், பதவி, புகழ் என்று நாம் தேடிப்போவதெல்லாமும் அலங்காரம்தான். இந்த அலங்காரங்களையும் விடப் பெரிய அலங்காரம் அம்பாள் அருளுக்கு பாத்திரமாவதுதான். அதைவிட பெரிய நகை, ஆபரணம், அலங்காரம் இல்லை. "மற்றதெல்லாம் அலங்காரமே இல்லை" என்ற ஞானத்தைத் தரும் அலங்காரம் இது.

சாட்சி -- நீதிபதி இரண்டும் ஒருவராகவே இருப்பதால் பொய் சாட்சியை நிஜமென்று நம்பி நீதிபதி தீர்ப்பு கொடடுப்பத்ற்கு இடமேயில்லை.  இந்த சாட்சி - நீதிபதியை யாரும் ஏமாற்ற முடியாது. அநேக குற்றங்கள் நீதிமன்றத்திற்கே போகாத மாதிரி, இந்த பெரிய நீதிபதியிடமிருந்து யாருமே தப்பிக்கவும் முடியாது.
Related Posts with Thumbnails