Friday, November 26, 2010

ஸ்த்ரீகள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறார்கள். அவர்களின் பண்பு கெடுக்கிறதற்கு இடம் தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. வரவை சிறுத்து, செலவை பெருக்கினால், அது திருடு" என்றொறு பழமொழி இருக்கிறது.

லோகோத்ததி மஹத்பூரி நியமாய நமோ நம:  ஓம்



இந்த உலகில் நாம் யாருமே பாவியாக இருக்க விரும்புவதில்லை.  ஆனால் பாப காரியமே அதிகமாகச் செய்கிறோம்.  நாம் எல்லோரும் புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்.  ஆனால் புண்ணிய காரியங்கள் செய்வதிலை.


எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்.  ஆகவே நல்லதுக்கும் கூட எதிர்ப்பு இருந்தால் தான் நம்குறை நிறை சரியாக வெளியாகும்.  நம்மை காத்துக் கொள்வதில் விழிப்பும் இருக்கும்.  ஆனால் எதிர்ப்பு என்ற 
பெயரில் இல்லாத கெடுதல்களைச் சொல்லி நல்லதை தூக்கிப் போடக்கூடாது.  

யாருக்கு எதெது நன்மை பண்ணுமோ அதைப் பிரியமாகச் சொல்வதுதான் சத்தியம். வரதட்சணை பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்தும் பழக்கமும் தொலைய வேண்டும்.

ஓம்பக்த காமலதாஃ கல்பபாதபாய நமோ நம:



"தான் இன்னொருவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்று நினைக்கிறதே பாவம்" என்று சாத்திரங்களில் சொல்லியிருக்கிறது.  மகாங்களும் இப்படித்தான் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள்.


சத்திய இலக்கணம் என்ன வென்றால் பிறத்தியார் ஒருவருடைய நலனே நோக்கமாயிருகக வேண்டும்.  அதற்காக வேறொருவருக்கு கெடுதல் பண்ணி இவர்களுக்கு நன்மை செய்வதாக இருக்க கூடாது.  அதாவது,
எவருக்கும் கெடுதல் உண்டாக்காதாக இருக்க வேண்டும்.  சுயலாபம், சுயநலம் கலக்காமல் இருக்க வேண்டும்.

தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். தெய்வ காரியம், சமூக காரியம் இரண்டிலும், ஒன்றையும் விடாமல் பண்ண வேண்டும்.

ஓம்பதவாக்ய ப்ரமாணாதி பாரிணாய நமோ நம: ஓம்





உங்கள் வீடு ஒரு குடும்பம்.  இதற்கு அப்பாவும் அம்மாவும் தலைவர்கள்.  இப்படியே இந்த உலகம் முழுதும் ஒரு பெரிய குடும்பம்.  இதற்கு இறைவனும், இறைவியும், அப்பாவும், அம்மாவுமாக இருக்கிறார்கள்.


கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்பதுதான்.  அதற்கு இடையூறாக அரசியலில் ஈடுபாடு காட்டுவது தனக்கும், தேச நட்ப்புக்கும் இடயூறுதான் செய்யும்.  நம் தேசத்தை நல்ல வழியில் நடத்துவதற்கு முதலில் நல்லபுத்தியும்,  தர்மபலமும், தெய்வபலமும் பெற்று,  நிலைப்படுத்திக் கொண்டால்தான் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

வெளிப் பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.

ஓம் மஹாயோகி வினிர்பேத்ய மஹத்த்வாய நமோ நம:



அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல் மூடி வைத்தால் அது சிரங்காகி விடும்.  அது மாதிரி தப்பை மூடி மறைத்தால், அது பொய் என்ற சிரங்காகி விடுகிறது.  உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.  


இன்னொரு பெரிய அழுக்கு குழந்தைகளிடத்தில் சுலபத்தில் சேர்கிற அழுக்கு, பொறாமைக்குணம்.  இவ்வழுக்குக்காக எண்ணங்களாலேயே அறிவு, உடம்பு,  இரண்டையும் பாழாக்கிக் கொள்கிறோம். நம்மை 
நாமே கெடுத்துக் கொள்வதைத் தவிர பொறாமையால் வேறு எந்த விதப் பயனும் இல்லை.
Related Posts with Thumbnails