![]() |
ஓம் அம்மனித்வாதி முக்யார்த்த ஸித்திதாய நமோ நம: |
ந காயத்ர்யா பரமந்த்ர: ந மாதூபர தைவதம் ந காச்யப பரமம் தீர்த்தம ந ஏகாதச்யா: ஸமம் வ்ரதம்
காயத்ரிக்கு மேலே மந்திரமில்லை; அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை; [தாயிற்சிறந்ததொரு கோயிலுமில்லை] ; காசிக்கு மேலே தீர்த்தமில்லை" என்று சொல்லி கடைசியில் "ஏகாதசிக்கு ஸமானமாக
விரதமெதுவுமில்லை" என்று முடிகிறது. மற்றதெற்கெல்லாம் மேலே ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு "ஸமமாக " ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் விரதங்களை எடுத்துக்
கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு மேலே மட்டுமில்லாமல், அதற்கு ஸமமாகக் கூட எதுவுமில்லை. ரொம்பவும் சிறப்பித்து சொல்லியிருக்கிறது.