Wednesday, October 27, 2010

எக்காரணமும் வியாஐமும் இன்றி பிரியமாய் இருப்பதுதான் உண்மை அன்பு.

" ஓம் அபின்னாபின்னாத்மைக்ய விக்ஞான ப்ரபோதாய நமோ நம: "


உத்தமமான பொருளிடம் வைக்கும் அன்புக்கே பக்தி என்று பெயர்.  நமக்கு சமமானவர்களிடம் வறுக்கும் அன்பு, நட்பு உத்தமமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வயதில் பெரியவர்களிடம்  வைக்கும் அன்பு - மரியாதை, சின்னவர்களிடம், நமக்கு கீழ்பட்டவர்களிடம் வைக்கும் அன்பு - அருள், கஷ்டப்ப்டுகிறவர்களிடம் வைக்கும் அன்பு - கருணை.


பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பலனில்லை.  அவர்களுடைய மனங்களும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.


"அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு.  நமக்கே செய்து கொள்கிற அலங்காரம், அகங்காரத்திற்குத்தான் வழிகாட்டும் "

மனோதத்துவப்படி, நாம் எதை நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ, அதுவே ஆகிறோம்.



" தேஸகாலாபரிச்சின்ன த்ருக்ரூபாய நமோ நம: ஓம் "




தீபத்தில் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், நிலம் வாழ்விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ, அப்படியே நம் மனத்திலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாகப் பிரகாசிக்க வேண்டும்.


தனக்கென்று எவ்வளவு செலவழிக்க முடியுமோ அப்படி எளிமையாக வாழ்ந்து மிச்சம் பிடித்து அதை தர்மத்துக்கு செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சித் தர்மம்" என்பது.


ஒரு மனிதன், மிருகம், பறவை இவற்றை உண்பது உடன் பிறப்பை கொலை செய்வது தான்.  அசைவ உணவை ஆதரித்தால் "அனைத்துயிர் சகோதரத்வம்" என்பதற்கு அர்த்தமில்லாமல் போகிறது.  

Tuesday, October 5, 2010

தர்மங்களை எடுத்துச் சொல்வதை விட எடுத்துக் காட்டாக தாங்களே இருப்பதுதான் அதிக சக்திவாய்ந்தது


"ஓம் க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞ பரத்யேக திருஷ்டிதாய நமோ நம: "

நமது மதத்தில் தனி மனிதனுக்கும் பலவிதக் கட்டுப்பாடுகள், சமுகத்திற்கும் பலவிதக் கட்டுப்பாடுகள்.  
கட்டுப்பாடுகள் என்றால் கரைபோடுவது என்று  அர்த்தம்.  கரையில்லாமல் ஒரு ஏரி  இருக்க முடியுமா?
கட்டுப்படுத்தக்கூடாது என்று அப்படியே உடைந்து விட்டால்,  நீர் முழுதும் பாழாகி,  ஊரும் பாழாக வேண்டியது தான்.

"பழையது" என்பதற்காகவே அதுதான் உயர்த்தி என்று சொல்லவேயில்லை.  ஆனால் "பழையது" என்பதாலேயே அதை உதவாதது என்று ஒதுக்கி விடவும் கூடாது.  அதன் பயன் என்ன என்று தேர்ந்து பார்த்தே எடுத்துக் கொள்ள வேண்டும்.  

பக்தி, கட்டுப்பாடு, தியாகம்


"ஓம் சனகாதிமஹாயோகிசத்ருஷாய நமோ நம: "



பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது.  உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் 
அதோடு சேர்த்திக் கொள்ள வேண்டிய பத்தியம் பணிவு என்பதே.


பள்ளியில் படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் வைத்து பயன் நமக்கு ஏது?  பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலியவை இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால் சாதுரியமாக அயோக்கியத்தனங்கள் செய்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது.


தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும்.  உறுதியான சங்கல்ப்பம் 
இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.  

ஓர் மனிதனிடம் இருக்கவேண்டிய சிறந்த குணங்கள்



"வேதமார்க்க ப்ரமான ப்ரக்யாப்ரகாய நமோ நம: ஓம்" 



1.  பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றிலும் ஆசையை விடுவது.  2.  கேட்டதில், கேட்க போவதில் ஆசையை விடுவது.  3.  பார்த்ததில், பார்க்காததில் ஆசையை விடுவது.  எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் ஒரு 
மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.



கேட்ட உபதேசத்தைவிடாமல் மனனம் செய்து அர்த்தத்தை கண்டு கொண்ட பிறகு அந்த அர்த்தம் ஒன்றிலியே மனதை இடைவிடாமல் ஈடுபடுத்தி நிற்பதே தியானம் ஆகும்.


பணத்துக்காக பறக்காத போது இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும்.  வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் சௌபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.  



நம் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வெண்டிய விதம்.





" ஓம் சந்த்ர மௌளிபாதாப்ஜம துபாய நமோ நம: "


எங்கும் இருக்கும் இறைவன் நாம் இருக்கச் சொல்லும் இடத்தில் கல், மண், செப்பு முதலிய எந்த உருவத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான்;  அப்படிப்பட்ட யோக்யதையும் கருணையும் அவனுக்கு நிச்சயமாக இருக்கிறது.  இல்லை என்றால் அப்படிப்பட்ட இறைவன் நமக்கு வேண்டவே வேண்டாம்.


பிற மதத்தினர் என்றவுடனேயே எதிர்ப்புணர்ச்சியோடுதான் வாதிடுவது என்றில்லாமல் நேயத்துடனேயே அணுகி, தங்களுக்குள்ள நியாயமான உரிமைகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப் பார்பது என்ற 
மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
Related Posts with Thumbnails