Thursday, March 11, 2010

அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் இல்லை. அறிவுக்கும் அப்படியே என்பதே பாரத்யர்கள் கடைப்பிடித்த உள்ளத நெறி. நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்திரர்கள்.



ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்ரீ சரஸ்வத்யை நமோ நம:

தன் உயிரே போவதாக இருந்தாலும் அறிவை எங்கிருந்தாலும் பெறப்பாடுபடுவது. அதே மாதிரி, தன் உயிரையே எடுக்கக்கூடியவனாக இருந்தாலும், தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பது - இதுதான் இந்தியப் பண்பாடு.



நம் வரையறைகளை [limitations ] புரிந்து கொண்டு நம்முடைய அறிவுரை [advice] எங்கே எடுபடுமோ அங்கே மட்டும் நல்லது, பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்வது தான் நம்மாதிரி சாதாரண் நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.

Wednesday, March 3, 2010

தானும் கரை சேர்த்து பிறரையும் சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு. "காமன்" உள்ளே புகுவதற்கு முன் "காயத்ரீ" உள்ளே புகுந்து விடவேண்டும் என்பது முக்கியம்.

தாயார், தகப்பனார்கள் இந்த உலகத்தில் பிறப்பைக் கொடுத்து இந்த உலகத்தில் நன்றாக வாழப் பண்ணி இந்த உலகத்திற்கான சொத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இவையெல்லாம் நிலையில்லாதவை. நிலையான சொத்தை - என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் "குரு" தான்.



தனக்குப் பிடித்த ஒருவரைத் தானே தேர்ந்தெடித்து வரிப்பதுதான் "வரணம்" என்பது. சரியான குருவைத் தேர்ந்தெடுத்து அவரிடம் போய்ச் சேருவது "குருவர்ணம்". நல்ல சீடனைத்தேடி எடுப்பது "சிஷ்ய வரணம்".
Related Posts with Thumbnails