Wednesday, April 4, 2012

மான வவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை.


ஓம் தப: ப்ரபா விராஜ த்வத்வாதிருஷாய நமோ நம: 


ஜனங்கள் கோவிலுக்கும் தர்மோபதேசம் நடக்குமிடங்களுக்கும் போய்ப் போய் சாந்தர்களாவார்கள். சட்டத்தை மீறாமல் ஸாத்விகற்களாக,
எல்லோருடனும் சமாதானமாக வாழ்ந்தார்கள். இந்த சமாதானத்தை ஜாதி தர்மம் காப்பாற்றி வந்தது. இல்லத்தில் கோவிலுக்கும் தர்மம்
தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது.  எங்க்கும் இடிந்த கோயில்களும் இடியாத
கோர்ட்டுகளும் காணப்படுகின்றன.


பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு
பாவமும் நமது மனசிலும் வருகின்றன.

Saturday, February 18, 2012

மதச்சார்பெற்ற அரசு




ஓம்க்வசித்பாலஜன அத்யந்த ஸூலபாய நமோ நம: 


சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை "செக்யூலரிஸம்" என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது 
அரசியலாரின் கருத்தாக உள்ளது.  இந்த "செக்யூலரிஸம்" என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.


இது சரியான கருத்தல்ல என்று எடுத்துக்காட்டி, "செக்யூலரிஸம்" என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது.  தற்போது எண்ணுவதுபோல் அது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மதத்தொடர்பே அற்று இருப்பதால், மாறாக அது, அரசாங்கமானது எந்த 
ஒரு மதத்தையும் மட்டும் சாராது.  எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே என்பதுதான்.  


ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து, பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது.  எல்லா மதங்களையும் ஏற்ற 
இறக்கமின்றி சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த 
கொள்கையே உண்மையான "செக்யூலரிஸம்" ஆகும்.  

Thursday, December 1, 2011

ஒழியணும் என்பதை விட்டு வளரணும் என்று ஆரம்பித்தோமானால், அத்தனை பேதமும், த்வேஷமும், சண்டையும் போய்விடும்.



ஓம் ஸ்ரீசக்ரத நிர்மான்ய சுப்ரதாய நமோ நம: 


கல்யாணத்துக்கு பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந்தால் போதும்.  மூலம் ஆயில்யம்னு பார்த்துண்டு அதனாலே பெண்களோட திருமணம் தடை ஏற்படக்கூடாது.  தோஷம்ன்னு இருந்தா எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கு.  அந்த பரிகாரத்தை செய்து விட்டு திருமணத்தை நடத்திக்கலாம்.  பிள்ளையைப் பெற்ற பெண்கள் முன்வந்து வரதட்சிணை வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்தால்தான் வரதட்சிணைக் கொடுமைக்கு முடிவு கட்ட வழி பிறக்கும்.  

Thursday, September 8, 2011

இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும், ஒவ்வொரு நாளும் ஒரு பசுவிற்காவது ஒரு பிடி புல் கோடுக்க வேண்டும்.



ஓம் அத்வைதானந்தபரித சித்ருபாய நமோ நம:


வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்திற்கு கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது பிள்ளையின் கடமை.  இதுதான் இப்போது இளைஞர்கள் செய்யவேண்டிய பெரிய சீர்திருத்தம்.  கலப்பு மணம், காதல் கல்யாணம் பண்ணிக் கோள்வது மாதிரியான சாஸ்திர விரோதமான காரியங்களைச் செய்து பெருமைப்படுவதற்கு
பதில் சாஸ்திரோத்தமான இந்த வரதக்ஷிணை ஒழிப்புக்கு நம்முடைய இளைஞர்கள் உறுதியோடு சகாயம்
செய்தால் இதுவே பெரிய சீர்திருத்தமாயிருக்கும்.


எல்லாவித தானங்களிலும் அன்னதானம் விசேஷம்.  "உண்டி --------உயிர் கொடுத்தோரே" , "யா......இடிமின், அவர் இவர் என்னன்மின்" என்றே திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறது.


இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும், ஒவ்வொரு நாளும் ஒரு பசுவிற்காவது ஒரு பிடி புல் கோடுக்க வேண்டும்.

Monday, March 28, 2011

பிள்ளையார் சுழி





"ஓம்க்வசின்மஹாஜன அதீவ துஷ்ப்ரபாய நமோ நம:"



பிள்ளையார் ஏழை, எளியவர்களுக்கெல்லாம் ஸ்வாமி.  மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணியிலும்கூட எவரும் ஒரு பிள்ளையாரைப் பிடித்துப் பூஜை செய்துவிடலாம்.  அவர் எளிதில் சந்தோஷப் படுகிறவர்.  எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து அந்தக் கல்லோ, களிமண்ணோ அதற்குள்ளிருந்து கொண்டு அருள் செய்வார்.  அவரை வழிபட நிறைய சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை.  ஒன்றும் படிக்காதவனுக்கும், அவன் கூப்பிட்ட குரலுக்கு வந்து விடுவார்.


தோப்புக்கரணம் போடுவதால் நம் நாடிகளின் சலனம் மாறும்.  மனசில் தேய்வீகமான மாறுதல்கள் உண்டாகும்.  நம்பிக்கையோடு செய்தால் பலன் தெரியும்.


தமிழ்நாட்டின் பாக்கியமாகத் திரும்பிய இடமெல்லாம் அமர்ந்திருக்கும் அவரை நாம் எந்நாளும் மறக்கக்கூடாது.  நாம் எல்லோரும் தவறாமல் பிள்ளையார் கோயிலுக்குப் போவது, தேங்காய் உடைபது, விநாயகர் அகவல் சொல்வது என்று வைத்துக் கொண்டால்,  இபோதிருக்கிற இத்தனை ஆயிரம் கோயிலுங்கூடப் போதாது.  புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும்.


நமக்கும், நாட்டுக்கும் உலகுக்கும் எல்லா க்ஷேமங்களும் உண்டாவதற்கு அவ்வையார் அகவல் மூலம் பிள்ளையாரைப் படிப்பதே வழி.  

Saturday, January 8, 2011

லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட பாஷை உண்டென்றால் அது வேத பாஷையின் ஸந்தந்தான்.



ஓம்பக்தலோஜன ராஜீவ பாஸ்கராய நமோ நம:


நம்முடைய ஹிந்து மதம் ஒன்றுதான் "இது ஒன்றே மோக்ஷ மார்க்கம்" என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான், பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பது கிடையாது.  ஏனென்றால், "ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்கங்களே பல மதங்களும்" என்று நம் முன்னோர்கள் நங்கு உணர்ந்திருந்தனர்.


வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  அதுவே தப்பு;  வேத பாஷைக்கு ஸம்ஸ்கிருதம் என்று பேர் இல்லை.  அதற்குப் பேர் ஸந்தஸ் என்பதுதான்.  சந்தஸ்
என்றால் சந்தம் [Metre]   மட்டுமில்லை.  முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட பாஷை உண்டென்றால் அது வேத பாஷையின் ஸந்தந்தான்.  

நித்தார் காரியங்கள் செய்வதில் சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு செய்வது சிரார்த்தம்.

"ஓம் தத்தத்விபாக சத்போத தாயகாய நமோ நம:"


பிற பெண்களை தாய்மார்களாக மதிக்க வேண்டும்.  பிற உயிரைத் தன்னுயிர்போல் மதிக்க வேண்டும். உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும்.  சமூகச் சச்சரவுகள், வகுப்புச் சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும்.  எல்லோரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும்.  எல்லோரிடமும் வாழவேண்டுமென ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும்.  ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும் ஆத்ம முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும்.  வெற்றிக்கெல்லாம் புத்தியும்,  சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.
Related Posts with Thumbnails