![]() |
ஓம்க்வசித்பாலஜன அத்யந்த ஸூலபாய நமோ நம: |
சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை "செக்யூலரிஸம்" என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது
அரசியலாரின் கருத்தாக உள்ளது. இந்த "செக்யூலரிஸம்" என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
இது சரியான கருத்தல்ல என்று எடுத்துக்காட்டி, "செக்யூலரிஸம்" என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது. தற்போது எண்ணுவதுபோல் அது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மதத்தொடர்பே அற்று இருப்பதால், மாறாக அது, அரசாங்கமானது எந்த
ஒரு மதத்தையும் மட்டும் சாராது. எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே என்பதுதான்.
ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து, பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது. எல்லா மதங்களையும் ஏற்ற
இறக்கமின்றி சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த
கொள்கையே உண்மையான "செக்யூலரிஸம்" ஆகும்.