![]() |
ஓம்பக்தலோஜன ராஜீவ பாஸ்கராய நமோ நம: |
நம்முடைய ஹிந்து மதம் ஒன்றுதான் "இது ஒன்றே மோக்ஷ மார்க்கம்" என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான், பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பது கிடையாது. ஏனென்றால், "ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்கங்களே பல மதங்களும்" என்று நம் முன்னோர்கள் நங்கு உணர்ந்திருந்தனர்.
வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுவே தப்பு; வேத பாஷைக்கு ஸம்ஸ்கிருதம் என்று பேர் இல்லை. அதற்குப் பேர் ஸந்தஸ் என்பதுதான். சந்தஸ்
என்றால் சந்தம் [Metre] மட்டுமில்லை. முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட பாஷை உண்டென்றால் அது வேத பாஷையின் ஸந்தந்தான்.