Monday, March 28, 2011

பிள்ளையார் சுழி





"ஓம்க்வசின்மஹாஜன அதீவ துஷ்ப்ரபாய நமோ நம:"



பிள்ளையார் ஏழை, எளியவர்களுக்கெல்லாம் ஸ்வாமி.  மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணியிலும்கூட எவரும் ஒரு பிள்ளையாரைப் பிடித்துப் பூஜை செய்துவிடலாம்.  அவர் எளிதில் சந்தோஷப் படுகிறவர்.  எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து அந்தக் கல்லோ, களிமண்ணோ அதற்குள்ளிருந்து கொண்டு அருள் செய்வார்.  அவரை வழிபட நிறைய சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை.  ஒன்றும் படிக்காதவனுக்கும், அவன் கூப்பிட்ட குரலுக்கு வந்து விடுவார்.


தோப்புக்கரணம் போடுவதால் நம் நாடிகளின் சலனம் மாறும்.  மனசில் தேய்வீகமான மாறுதல்கள் உண்டாகும்.  நம்பிக்கையோடு செய்தால் பலன் தெரியும்.


தமிழ்நாட்டின் பாக்கியமாகத் திரும்பிய இடமெல்லாம் அமர்ந்திருக்கும் அவரை நாம் எந்நாளும் மறக்கக்கூடாது.  நாம் எல்லோரும் தவறாமல் பிள்ளையார் கோயிலுக்குப் போவது, தேங்காய் உடைபது, விநாயகர் அகவல் சொல்வது என்று வைத்துக் கொண்டால்,  இபோதிருக்கிற இத்தனை ஆயிரம் கோயிலுங்கூடப் போதாது.  புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும்.


நமக்கும், நாட்டுக்கும் உலகுக்கும் எல்லா க்ஷேமங்களும் உண்டாவதற்கு அவ்வையார் அகவல் மூலம் பிள்ளையாரைப் படிப்பதே வழி.  

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails