Wednesday, December 2, 2009

அன்பு தான் நல்லதைச் செய்வது. ஆன்பு தான் புனிதம்


                       

                         ஓம் காந்தி நிர்ஜித ஸுர்யேந்து கம்ராபாய நமோ நம:





அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தருவது லக்ஷ்மிகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது. புனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு. ஆசையும், காமமும் புனிதம் புனிதமில்லை. அன்புதான் புனிதம். அதனால்தான் "அன்பேசிவம்" என்று சோல்வது.


இப்போது கை நாமாகத் தோன்றுகிறது. குரல் நாமாகத் தோன்றுகிறது. உடம்பு நாமாகத் தோன்றுகிறது. இதுபோல் உலகனைத்தும் நாமாகி விட வேண்டும். அப்படிப்பட்ட குணம் ஒருவனுக்கு அனுபவத்தில் வந்தால் அவன் சண்டாளனாக இருந்தாலும் அவந்தான் பண்டிதன். இந்த ஞானம் தான் மாறாக ஆனந்தமாக மோட்சம். இந்த சரீரத்தில் இருக்கும் போதே அனுபவிக்கக்கூடிய மோட்சம்.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails